கதவின் வழியாக அநியாயமாக வரும் செல்வம். ஜன்னல்களின் வழியாக வெளியே செல்கிறது. - பழைய எகிப்திய வாக்கு
மகாவுன்னத ஆட்சி அதிகராமானாலும், ஒழுங்கு முறை தவறினால் அழிந்து போகும். - ப்யூப்லிலியஸ் வைரஸ்
சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா. அல்லது வானத்தைக் காண்பதா? உன் இஷ்டம். - ரஸ்கின்
தேவையான பொருளுதவி செய்து விதவைகளையும் ஏழை களையும் வாழ்விப்பவன் இறைநெறியில் ஒரு பெருங் கொடையாளிப் போலவும், இரவு முழுவதும் தொழுபவனைப் போலவும், எப்போதும் நோம்பு நோற்பவனைப் போலவும் இருக்கிறான். - நபிகள் நாயகம்
பணம் உண்டானால் முயற்சி உண்டு; வல்லமையும் உண்டு. - இந்தியப் பழமொழி
ஒருவனுடைய கருத்துக்களைக் கேட்பதற்கு உலகம் எப்போதுமே ஆவலாய் இருப்பதில்லை. - காந்தியடிகள்
ஒழுக்கமற்ற செயல்களால் உயர்வான வாழ்க்கை அமைவது தடைபடுகிறது. - பழமொழி
நாளைய வெற்றிக்கு இன்றையதின்னம் விதைப்போடு. - ஒர் அறிஞர்
அளவுக்கு மீறிய செல்வமும், அளவுக்கு மீறிய வறுமையும் ஆபத்தானவை. - பழமொழி
நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும், இருளுக்கும் பயப்படத் தேவையில்லை. - பழமொழி
எதிர்ப்பும் தடையும் இருந்தால்தான். மனிதன் விரைந்து முன்னேறுவான். - புத்தர்
ஆயிரம் முறை சிந்தியுங்கள் ஒருமுறை முடிவெடுங்கள். - எட்மண்ட் பர்க்
உயிரோடுள்ள மனிதன் தனக்குதானே கட்டிக் கொள்ளும் கல்லறையே சோம்பல். - டெய்லர்
விவேகத்தின் தந்தை அனுபவம், விவேகத்தின் தாய் நினைவாற்றல். - பழமொழி
வாழ்க்கை என்றால் அது ஒரு துணிச்சல் நிறைந்த விடாமுயற்சி என்றுதான் பொருள். - ஹலன் கெல்லர்
நீச்சல் போடுகிறவனுக்குத்தான் அலையின் வேகம் என்னவென்று தெரியும். - பழமொழி
தொண்டு செய்! அன்பு செய்! பரிசுத்தவனாகு! மெய்உணர்வுகொள்! நல்லவனாக இரு! - விவேகானந்தர்
உன்மனதையும் உள்ளுணர்வையும் பின் தொடர்ந்து செல் அவற்றுக்குத் தெரியும் நீ என்னவாக ஆகப்பேகிறாய் என்பது. - ஸ்டீவ் ஜாப்ஸ்
நல்ல குடும்பத்தை உருவாக்குவதே நீ நாட்டுக்குச் செய்யும் சேவையாகும். - பழமொழி
நேற்று செய்ய முடியாததை இன்று செய்து கொண்டிருக்கிறாய். இன்று செய்ய முடியாததை நாளை செய்து முடிப்பாய். - லெனின்
பழமொழிகள்
திங்கள், 15 ஏப்ரல், 2013
அறநெறியை போற்றும் பழமொழிகள்
செயலாக்கத்தை வெளிப்படுத்தும் பழமொழிகள்
பிழையைச் சரிபடுத்திக்கொள்ள முயற்சி செய்வதில் அவமானம் இல்லை. - ராஜாஜி
எதிர்ப்புகளைத் தாங்குவதற்காகத்தான் இதயம் படைக்கப் பெற்றிருக்கிறது. - டேவிட் ஹயூம்
காற்றுக்கு சாயும் நாணல்தான் காலத்துக்கும் நிலைக்கும். - பழமொழி
துன்பத்தைத் துனிவோடு தாங்குவதைப் போல, இந்த உலகில் பாராட்டத் தகுந்த செயல் எதுவுமில்லை. - செனீகா
தன் தப்பு பிறருக்கு சத்து. - பழமொழி
எது எதில் சத்தியத்தைக் காண்கிறீர்களோ, அது அதை ஆனமிகமாகப் போற்றுங்கள். - ஈராஸ்மஸ்
கடவுளை இதயம் முழுவதையும் கொண்டு தேடினால் அவனை நிச்சயம் காண்பாய். - எபிரேய மதம்
குணம் பெரியதேயன்றி குலம் பெரியதல்ல. - பழமொழி
பணம் பேச ஆரம்பிக்கும்போது நியாயம் மௌனம் சாதிக்கிறது. -ரஷ்
இன்சொல் வழங்குவதால் நாக்குக் காயமுறுவதில்லை. - ஹேவுட்
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும். - பழமொழி
ஒவ்வொரு மனிதனிடமும் ஒரேவிதமான இதயம்தான் துடிக்கிறது. - மாத்யூ ஆர்னால்டு
நாட்டுப் பற்றை விட அதக நெருக்கமான அன்பு வேறில்லை. - பிளேட்டோ
நண்பனை, பலருக்கு நடுவில் புகழ்ந்து பேசுங்கள்; தனிமையில் கண்டித்துத் திருத்துங்கள். - ஆங்கிலப் பழமொழி
தீய மனிதர்கள் பயத்துக்குக் கீழ்ப்படிகிறார்கள். நல்ல மனிதர்கள் அன்புக்குக் கீழ்படிகிறார்கள். - அரிஸ்டார்டில்
ஒவ்வொன்றிலும் நன்மையும், தீமையும் இருக்கிறது.அதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் எல்லாக் கலையும். - ஒர் அறிஞர்
அறநெறி நிற்போர் அனைவரும் குழந்தை உள்ளம் உடையவர். - தாவோ (சீனம்)
உண்மை பேச இருவர் வேண்டும். ஒருவர் பேசுவதற்கு; மற்றொருவர் கேட்பதற்கு. - தோரோ
ஓநாயுடன் நீ வசித்தால், ஊளையிடத்தான் கற்றுக் கொள்வாய். - ஸ்பானியப் பழமொழி
வட்டி வாங்குகிறவர், வட்டி கொடுப்பவர், அது தொடர்பான ஒப்பந்தங்களை எழுதுகிறவர். அதற்கு சாட்சி கூறுவோர் - இவர்கள் யாவரும் ஒரே விதமான குற்றத்தையே செய்கிறார்கள். - நபிகள் நாயகம்
வாழ்க்கை நெறியை குறிப்பிடும் பழமொழிகள்
சோம்பலைத் தடுக்க வேண்டுமா? அதிகமாக உண்பதைத் தவிர்த்திடு. - டால்ஸ்டாய்
உயர்ந்த பண்பாடு என்னும் சிறைக்குள் அடைப்பட்டு, அதைப் பயில நேர்மை எனும் சட்ட திட்டங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்க முடியும். - கவிஞர் தாகூர்
பண்பில்லாதவன், பெற்ற பெருஞ் செல்வம் பயனற்று போகும். - பழமொழி
உலகில், நான்! என்னைத் தவிர வேறு ஓர் சகோதரனைக் குறை சொல்ல மாட்டேன்; என்குறைகள் எனக்குத் தெரியும். - ஷேக்ஸ்பியர்
நம்மால் எங்கே இந்தப் பெரிய காரியத்தைச் செய்ய முடியும் என்று நினைத்து நல்ல செயல்களைச் செய்யாமல் இருந்து விடாதே. நீர் துளித் துளியாகக் கொட்டியே குடம் நிரம்பிவிடும். - புத்தர்
நாம் மேலே போகும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் கிழே வரும்போது அது முடியாது. - நெப்போலியன்
செய்யும் காரியங்களை மிகைப்படுத்துகிறோம். தகாத வெற்றிகளை அடைகிறோம். தோல்வியடையும்போதோ இவையெல்லாவற்றையும் விட அதிக கசப்படைகிறோம். - சிரில்
எனக்கு ஏன் சிலை வைக்கப்பட்டது என்று யாராவது கேட்பதைவிட, எனக்கு ஏன் சிலை அமைக்கப்படவில்லை என்று கேட்பதையே நான் விரும்புகிறேன். - மார்கஸ் காடோ
தண்ணீரில் ஏற்படும் வட்ட அலைகள் பெரிதாகிக்கொண்டே போய்க் கடைசியில் மறைந்துவிடும்; அது போல் புகழும் பெருகிக்கொண்டே போய்க் கடைசியில் ஒன்றுமில்லாமல் மறைந்துவிடும். - ஷேக்ஸ்பியர்
சிறந்த செயல்கள் எல்லாம் நல்லவையல்ல. நல்லச் செயல்கள் எல்லாமே சிறந்தவை! - பழமொழி
தன்னைத் தான் வென்றவன் ஆயிரம் வீரர்களை வென்றவனைவிட மேலானவன். - மாகவீரர் வாக்கு
ஒருவன் தான் செய்த குற்றத்தைக் காட்டிலும், அந்தக் குற்றத்தை உணர்ந்து, அதற்காகப் பரிதாபப் படாமல் இருப்பதே பெரிய குற்றமாகும். - பெய்ஸன்
இந்த உலகத்தில் விஷத்தினால் அழிந்தவர்களைக்காட்டிலும் பொன்னாசையால் அழிந்து போனவர்களே அதிகம். - ஷேக்ஸ்பியர்
என்னைக் கறையின்றி வாழ விடு. அல்லது யாருமே அறியாவண்ணம் இறக்க விடு. ஓ! என்க்குக் கௌரமான புகழைக் கொடு அல்லது எதுவுமே வேண்டாம். - அலெக்ஸாண்டர் போப்
உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. அந்தப் பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் எனபதில்தான் இருக்கிறது. - கவி தாகூர்
நாயோடு தாராளமாகப் பழகலாம். ஆனால் முன் யோசனையுடன் கையிலுள்ள குச்சியை மட்டும் நழுவ விட்டுவிடாதீர்கள்! - அரேபியப் பழமொழி
பிறரைவிடத் தான் புத்திசாலி என்ற ஜம்பம் பேசுபவன் சமயத்தில் சாய்ந்துவிடுகிறான். - ஈசாப்
சம்பளம் இல்லாத உத்தியோகம், திருடர்களின் பிறப்பிடம். - ஜெர்மானியப் பழமொழி
மூட நம்பிக்கையா? அது ஒர் அருவருக்கதக்க பொருள்; நசுக்கிப் போடு அதை. தயங்காதே! - வால்டேர்
இறைக்க இறைக்க நீர் ஊறும், உழைக்க உழைக்க பணம் சேரும். - பழமொழி
விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன், தகுதிக்கு அதிகமாகப் பெறுவதாக அறியக்கடவன். - ஷோபனார்
மன மகிழ்ச்சியே உடல் நலத்திற்கு முக்கிய காரணம். - மார்பி
காலத்தை வென்ற பழமொழிகள்.
இருள், இருள்’ என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, ஒரு சிறிய மெழுகு வர்த்தியைத் தேட முயற்சி செய்வது நலம். - கன்பூஷியஸ்
நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும் படி ஏற்படக் கூடாது. - ஔவையார்
கர்வம் கொண்டிருப்பவனைக் கண்டு வெற்றித் திருமகள் விலகி விடுகிறாள். - மெகலன்
பாவச் செயல்கள் முடிவில் துயரத்தை தரும். - மகாவீரர்
ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்வது கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும். - விதுரநீதி
எங்கு போனாலும் சரி, உன் முழு இதயத்துடன் போ. - கன்பூசியஸ்
இந்த உலகப் பொருள்களின் பின்னால் செல்லாதீர்கள். அவை உங்கள் சக்தியை வீணாக்கி, மன உறுதியை பலவீனமாக்குகின்றன. - கீதைச் சிந்தனை
இனிப்பான வாழ்க்கையையும் வரம்போடுதான் அனுபவிக்க வேண்டும். இந்த உண்மையை நாம் தெரிந்துகொள்ளத்தான் இறைவன் இனிப்பான கரும்புக்கு கனுக்கள் வைத்திருக்கிறான். - குரு சுரஜானந்
நம்முடைய வருவாயில் ஒரு சிறிய பாகமாவது ஏழைகளுக் கென்று ஒதுக்கி வைத்து, அதனை அவர்களுக்கு அன்புடன் தந்து மறுமைக்கு மாறாத நலனைத் தேடிக்கொள்ள வேண்டும். - அருணகிரிநாதர்
சிறந்த எண்ணங்களின் இருப்பிடம். சிறந்த செயல்களின் பிறப்பிடமாகின்றது. - பழமொழி
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும், அதை உன்னிடம் திருத்திக்கொள். - ஆங்கிலப் பழமொழி
ஒருவன் பலத்தினால் மற்றவர்களை அடக்கினால் அவர்கள் மனப்பூர்வமாக அடிபணிய மாட்டார்கள். அவர்கள் எதிர்ப்பதற்குப் பலமில்லாததால்தான் அடிபணிகிறார்கள். -மென்ஷியஸ்
தீய நெறியில் செல்லாதிருக்க எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதைவிட, நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்யவதே நலம். - பித்தாகோரஸ்
ஒரு சாதனை எத்தனைக்கு எத்தனை பிரமிக்கத் தக்கதாக உள்ளதோ, அத்தனைக்கு அத்தனை கடினமானது. - வைல்டர்
ஒருவரின் துன்பத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். நீங்களே அதற்கு ஆளாகி விடலாம். - கிராமத்துப் பழமொழி
நீ துயருறும் காரணம் எதுவாயினும் பிறருக்கு இன்னாதனவற்றைச் செய்யாதே. - புத்தர்
அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான். - மகாவீரர் வாக்கு
இந்த உலகம் ஒர் மிகப்பெரிய உடர்பயிற்சிக் கூடம். இங்கு நம்மை நாம் வலிமையுடையவர்களாக்கிக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம். - சுவாமி விவேகானந்தர்
மலைப்போன்ற பிரச்சனைகளையும். நம்பிக்கை என்ற சிறு உளியைக்கொண்டு சிறுக சிறுக துளைத்துவிடலாம். - பழமொழி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)