திங்கள், 15 ஏப்ரல், 2013

வாழ்க்கை நெறியை குறிப்பிடும் பழமொழிகள்


  1.  சோம்பலைத் தடுக்க வேண்டுமா? அதிகமாக உண்பதைத்  தவிர்த்திடு. - டால்ஸ்டாய்

  2.  உயர்ந்த பண்பாடு என்னும் சிறைக்குள் அடைப்பட்டு,  அதைப் பயில நேர்மை எனும் சட்ட திட்டங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்க   முடியும். - கவிஞர் தாகூர் 

  3. பண்பில்லாதவன், பெற்ற பெருஞ் செல்வம் பயனற்று   போகும். - பழமொழி 

  4. உலகில், நான்! என்னைத் தவிர வேறு ஓர் சகோதரனைக்   குறை சொல்ல மாட்டேன்; என்குறைகள் எனக்குத் தெரியும். - ஷேக்ஸ்பியர் 

  5. நம்மால் எங்கே இந்தப் பெரிய காரியத்தைச் செய்ய   முடியும் என்று நினைத்து நல்ல செயல்களைச் செய்யாமல் இருந்து விடாதே. நீர் துளித் துளியாகக் கொட்டியே குடம்   நிரம்பிவிடும். - புத்தர் 

  6. நாம் மேலே போகும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் கிழே வரும்போது அது முடியாது. - நெப்போலியன் 

  7. செய்யும் காரியங்களை மிகைப்படுத்துகிறோம். தகாத வெற்றிகளை அடைகிறோம். தோல்வியடையும்போதோ   இவையெல்லாவற்றையும் விட அதிக கசப்படைகிறோம். - சிரில் 

  8. எனக்கு ஏன் சிலை வைக்கப்பட்டது என்று யாராவது கேட்பதைவிட, எனக்கு ஏன் சிலை அமைக்கப்படவில்லை  என்று கேட்பதையே நான் விரும்புகிறேன். - மார்கஸ் காடோ 

  9. தண்ணீரில் ஏற்படும் வட்ட அலைகள் பெரிதாகிக்கொண்டே   போய்க் கடைசியில் மறைந்துவிடும்; அது போல் புகழும்  பெருகிக்கொண்டே போய்க் கடைசியில் ஒன்றுமில்லாமல் மறைந்துவிடும். - ஷேக்ஸ்பியர்

  10. சிறந்த செயல்கள் எல்லாம் நல்லவையல்ல. நல்லச்   செயல்கள் எல்லாமே சிறந்தவை! - பழமொழி 

  11. தன்னைத் தான் வென்றவன் ஆயிரம் வீரர்களை  வென்றவனைவிட மேலானவன். - மாகவீரர் வாக்கு 

  12. ஒருவன் தான் செய்த குற்றத்தைக் காட்டிலும், அந்தக் குற்றத்தை உணர்ந்து, அதற்காகப் பரிதாபப் படாமல்  இருப்பதே பெரிய குற்றமாகும். - பெய்ஸன் 

  13. இந்த உலகத்தில் விஷத்தினால் அழிந்தவர்களைக்காட்டிலும் பொன்னாசையால் அழிந்து போனவர்களே அதிகம். - ஷேக்ஸ்பியர்

  14. என்னைக் கறையின்றி வாழ விடு. அல்லது யாருமே   அறியாவண்ணம் இறக்க விடு. ஓ! என்க்குக் கௌரமான புகழைக் கொடு அல்லது எதுவுமே வேண்டாம். - அலெக்ஸாண்டர் போப்

  15. உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள்  ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. அந்தப் பொருளில்   எவ்வளவு தர்மம் செய்கிறோம் எனபதில்தான் இருக்கிறது. - கவி தாகூர் 

  16. நாயோடு தாராளமாகப் பழகலாம். ஆனால் முன் யோசனையுடன் கையிலுள்ள குச்சியை மட்டும் நழுவ  விட்டுவிடாதீர்கள்! - அரேபியப் பழமொழி

  17. பிறரைவிடத் தான் புத்திசாலி என்ற ஜம்பம் பேசுபவன்  சமயத்தில் சாய்ந்துவிடுகிறான். - ஈசாப்

  18. சம்பளம் இல்லாத உத்தியோகம், திருடர்களின் பிறப்பிடம். - ஜெர்மானியப் பழமொழி

  19. மூட நம்பிக்கையா? அது ஒர் அருவருக்கதக்க பொருள்;    நசுக்கிப் போடு அதை. தயங்காதே! - வால்டேர் 

  20. இறைக்க இறைக்க நீர் ஊறும், உழைக்க உழைக்க பணம் சேரும். - பழமொழி       

  21. விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன், தகுதிக்கு அதிகமாகப் பெறுவதாக அறியக்கடவன். - ஷோபனார்

  22. மன மகிழ்ச்சியே உடல் நலத்திற்கு முக்கிய காரணம். - மார்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக