திங்கள், 15 ஏப்ரல், 2013

காலத்தை வென்ற பழமொழிகள்.

  1. இருள், இருள்’ என்று    சொல்லிக் கொண்டிருப்பதை விட,   ஒரு சிறிய மெழுகு வர்த்தியைத் தேட முயற்சி செய்வது நலம். - கன்பூஷியஸ்

  2.   நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும் படி ஏற்படக் கூடாது. - ஔவையார்

  3.  கர்வம் கொண்டிருப்பவனைக் கண்டு வெற்றித் திருமகள் விலகி விடுகிறாள். - மெகலன் 

  4.  பாவச் செயல்கள் முடிவில் துயரத்தை தரும்.  - மகாவீரர்

  5.  ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்வது கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும்.   - விதுரநீதி

  6.  எங்கு போனாலும் சரி, உன் முழு இதயத்துடன் போ.  - கன்பூசியஸ்

  7.  இந்த உலகப் பொருள்களின் பின்னால் செல்லாதீர்கள். அவை உங்கள் சக்தியை வீணாக்கி, மன உறுதியை பலவீனமாக்குகின்றன. - கீதைச் சிந்தனை

  8.  இனிப்பான வாழ்க்கையையும் வரம்போடுதான் அனுபவிக்க வேண்டும். இந்த உண்மையை நாம் தெரிந்துகொள்ளத்தான் இறைவன் இனிப்பான கரும்புக்கு   கனுக்கள் வைத்திருக்கிறான். - குரு சுரஜானந்

  9.  நம்முடைய வருவாயில் ஒரு சிறிய பாகமாவது ஏழைகளுக் கென்று ஒதுக்கி வைத்து, அதனை அவர்களுக்கு அன்புடன் தந்து மறுமைக்கு மாறாத  நலனைத் தேடிக்கொள்ள வேண்டும். - அருணகிரிநாதர்

  10.  சிறந்த எண்ணங்களின் இருப்பிடம். சிறந்த செயல்களின் பிறப்பிடமாகின்றது.                          - பழமொழி

  11.  எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும், அதை உன்னிடம் திருத்திக்கொள்.    - ஆங்கிலப் பழமொழி

  12.  ஒருவன் பலத்தினால் மற்றவர்களை அடக்கினால் அவர்கள் மனப்பூர்வமாக அடிபணிய மாட்டார்கள். அவர்கள் எதிர்ப்பதற்குப் பலமில்லாததால்தான் அடிபணிகிறார்கள். -மென்ஷியஸ் 

  13.  தீய நெறியில் செல்லாதிருக்க எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதைவிட, நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தி  அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச்  செய்யவதே நலம். - பித்தாகோரஸ்

  14.  ஒரு சாதனை எத்தனைக்கு எத்தனை பிரமிக்கத் தக்கதாக உள்ளதோ, அத்தனைக்கு அத்தனை கடினமானது. - வைல்டர்

  15.  ஒருவரின் துன்பத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். நீங்களே அதற்கு ஆளாகி விடலாம். - கிராமத்துப் பழமொழி

  16.  நீ துயருறும் காரணம் எதுவாயினும் பிறருக்கு  இன்னாதனவற்றைச் செய்யாதே. - புத்தர்

  17.  அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான். - மகாவீரர் வாக்கு

  18.  இந்த உலகம் ஒர் மிகப்பெரிய உடர்பயிற்சிக் கூடம். இங்கு  நம்மை நாம் வலிமையுடையவர்களாக்கிக்  கொள்ளத்தான் வந்திருக்கிறோம். - சுவாமி விவேகானந்தர்

  19. மலைப்போன்ற பிரச்சனைகளையும். நம்பிக்கை என்ற சிறு உளியைக்கொண்டு சிறுக சிறுக துளைத்துவிடலாம். -   பழமொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக