திங்கள், 15 ஏப்ரல், 2013

செயலாக்கத்தை வெளிப்படுத்தும் பழமொழிகள்


  1. பிழையைச் சரிபடுத்திக்கொள்ள முயற்சி செய்வதில் அவமானம் இல்லை. - ராஜாஜி

  2. எதிர்ப்புகளைத் தாங்குவதற்காகத்தான் இதயம் படைக்கப்   பெற்றிருக்கிறது. - டேவிட் ஹயூம்

  3. காற்றுக்கு சாயும் நாணல்தான் காலத்துக்கும் நிலைக்கும். - பழமொழி

  4. துன்பத்தைத் துனிவோடு தாங்குவதைப் போல, இந்த உலகில் பாராட்டத் தகுந்த செயல் எதுவுமில்லை. - செனீகா

  5. தன் தப்பு பிறருக்கு சத்து.  - பழமொழி

  6. எது எதில் சத்தியத்தைக் காண்கிறீர்களோ, அது அதை ஆனமிகமாகப் போற்றுங்கள். - ஈராஸ்மஸ்

  7. கடவுளை இதயம் முழுவதையும் கொண்டு தேடினால் அவனை நிச்சயம் காண்பாய்.  - எபிரேய மதம்

  8. குணம் பெரியதேயன்றி குலம் பெரியதல்ல. - பழமொழி

  9. பணம் பேச ஆரம்பிக்கும்போது நியாயம் மௌனம் சாதிக்கிறது. -ரஷ்

  10. இன்சொல் வழங்குவதால் நாக்குக் காயமுறுவதில்லை. - ஹேவுட்

  11. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும். - பழமொழி

  12. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரேவிதமான இதயம்தான் துடிக்கிறது. - மாத்யூ ஆர்னால்டு

  13. நாட்டுப் பற்றை விட அதக நெருக்கமான அன்பு வேறில்லை. - பிளேட்டோ

  14. நண்பனை, பலருக்கு நடுவில் புகழ்ந்து பேசுங்கள்; தனிமையில் கண்டித்துத் திருத்துங்கள். - ஆங்கிலப் பழமொழி

  15.  தீய மனிதர்கள் பயத்துக்குக் கீழ்ப்படிகிறார்கள். நல்ல மனிதர்கள் அன்புக்குக் கீழ்படிகிறார்கள். - அரிஸ்டார்டில்

  16. ஒவ்வொன்றிலும் நன்மையும், தீமையும் இருக்கிறது.அதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் எல்லாக் கலையும். - ஒர்  அறிஞர்

  17. அறநெறி நிற்போர் அனைவரும் குழந்தை உள்ளம் உடையவர். - தாவோ (சீனம்)

  18. உண்மை பேச இருவர் வேண்டும். ஒருவர் பேசுவதற்கு; மற்றொருவர் கேட்பதற்கு. - தோரோ

  19. ஓநாயுடன் நீ வசித்தால், ஊளையிடத்தான் கற்றுக் கொள்வாய். - ஸ்பானியப் பழமொழி

  20. வட்டி வாங்குகிறவர், வட்டி கொடுப்பவர், அது தொடர்பான   ஒப்பந்தங்களை எழுதுகிறவர். அதற்கு சாட்சி கூறுவோர் - இவர்கள் யாவரும் ஒரே விதமான குற்றத்தையே செய்கிறார்கள். - நபிகள் நாயகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக