திங்கள், 15 ஏப்ரல், 2013

அறநெறியை போற்றும் பழமொழிகள்

  1. கதவின் வழியாக அநியாயமாக வரும் செல்வம். ஜன்னல்களின் வழியாக வெளியே செல்கிறது. - பழைய எகிப்திய வாக்கு

  2. மகாவுன்னத ஆட்சி அதிகராமானாலும், ஒழுங்கு முறை தவறினால் அழிந்து போகும். - ப்யூப்லிலியஸ் வைரஸ்

  3. சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா. அல்லது வானத்தைக் காண்பதா? உன் இஷ்டம். - ரஸ்கின்

  4. தேவையான பொருளுதவி செய்து விதவைகளையும் ஏழை களையும் வாழ்விப்பவன் இறைநெறியில் ஒரு பெருங் கொடையாளிப் போலவும், இரவு முழுவதும் தொழுபவனைப் போலவும், எப்போதும் நோம்பு நோற்பவனைப் போலவும் இருக்கிறான். - நபிகள் நாயகம்

  5. பணம் உண்டானால் முயற்சி உண்டு; வல்லமையும் உண்டு. - இந்தியப் பழமொழி

  6. ஒருவனுடைய கருத்துக்களைக் கேட்பதற்கு உலகம்  எப்போதுமே ஆவலாய் இருப்பதில்லை. - காந்தியடிகள்

  7. ஒழுக்கமற்ற செயல்களால் உயர்வான வாழ்க்கை அமைவது தடைபடுகிறது. - பழமொழி

  8. நாளைய வெற்றிக்கு இன்றையதின்னம் விதைப்போடு. - ஒர் அறிஞர்

  9. அளவுக்கு மீறிய செல்வமும், அளவுக்கு மீறிய வறுமையும் ஆபத்தானவை. - பழமொழி

  10. நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும், இருளுக்கும் பயப்படத் தேவையில்லை. - பழமொழி

  11. எதிர்ப்பும் தடையும் இருந்தால்தான். மனிதன் விரைந்து முன்னேறுவான். - புத்தர்

  12. ஆயிரம் முறை சிந்தியுங்கள் ஒருமுறை முடிவெடுங்கள். - எட்மண்ட் பர்க்

  13. உயிரோடுள்ள மனிதன் தனக்குதானே கட்டிக் கொள்ளும்  கல்லறையே சோம்பல். - டெய்லர்

  14. விவேகத்தின்  தந்தை அனுபவம், விவேகத்தின் தாய்  நினைவாற்றல். - பழமொழி

  15. வாழ்க்கை என்றால் அது ஒரு துணிச்சல் நிறைந்த விடாமுயற்சி என்றுதான் பொருள். - ஹலன் கெல்லர்

  16. நீச்சல் போடுகிறவனுக்குத்தான் அலையின் வேகம் என்னவென்று தெரியும். - பழமொழி

  17. தொண்டு செய்! அன்பு செய்! பரிசுத்தவனாகு! மெய்உணர்வுகொள்! நல்லவனாக இரு! - விவேகானந்தர்

  18. உன்மனதையும் உள்ளுணர்வையும் பின் தொடர்ந்து செல்   அவற்றுக்குத் தெரியும் நீ என்னவாக ஆகப்பேகிறாய் என்பது. - ஸ்டீவ் ஜாப்ஸ்

  19. நல்ல குடும்பத்தை உருவாக்குவதே நீ நாட்டுக்குச் செய்யும் சேவையாகும். - பழமொழி

  20. நேற்று செய்ய முடியாததை இன்று செய்து கொண்டிருக்கிறாய். இன்று செய்ய முடியாததை நாளை செய்து முடிப்பாய். - லெனின்

1 கருத்து: